அட கொடுமையே… நிலத் தகராறில் நடுரோட்டில்… தந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மகன்கள்… பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 2, 2026

Spread the love

கலியுகத்தின் கொடூரச் செயலாக, மகாராஷ்டிராவின் இந்தாபூர் பகுதியில் தந்தை என்று கூட பாராமல் தன் சொந்தத் தந்தையை இரண்டு மகன்கள் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் அஞ்சனா ராவத் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தை விற்பது தொடர்பான தகராறே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நிலத்தை விற்பனை செய்வது குறித்து தந்தையுடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இருவரும், பொதுமக்கள் நடமாடும் பொதுச் சாலையில் வைத்துத் தங்கள் தந்தையைத் தாக்கியுள்ளனர். இந்தச் சண்டையின் போது அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க, பெற்ற தந்தையைச் சற்றும் மதிக்காமல் மகன்கள் மிருகத்தனமாகத் தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/priyarajputlive/status/2095105932925735071/video/1

   

குடும்பச் சொத்துத் தகராறுகள் எந்த அளவுக்கு மனிதநேயத்தை மழுங்கடித்துக் கொண்டுவருகிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. பெற்ற தந்தையை நடுரோட்டில் தாக்கிய இந்தச் செயல் குறித்துப் பொதுமக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதுடன், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.