உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
அதில் 3 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் அடங்குவர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இந்த அரிதான பிரசவம் மிகவும் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்துள்ளது. தாயும், பிறந்த 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள செய்தியறிந்து அக்குடும்பத்திற்குப் பலரும் நேரில் வந்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
