“என்ன கொடுமைடா இதெல்லாம்…” கள்ளக்காதல் மோகம்… கணவனை தீர்த்துக்கட்ட நள்ளிரவில் சதி… மனைவின் ‘ வெறிச்செயல்… நொடியில் உயிர் தப்பிய சம்பவம்… போலீஸ் அதிரடி கைது…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் 37 என்பவருக்கும் சோனியா 27 என்பவருக்கும் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கட்டிட மேஸ்திரியான ஆகாஷ் 21 என்பவருடன் சோனியாவிற்குத் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் சக்திவேல் மனைவியைக் கண்டித்ததால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சோனியா, கணவர் உயிருடன் இருக்கும் வரை தனது கள்ள உறவைத் தொடர முடியாது எனக் கருதி, ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் குமரவேலுடன் இணைந்து சக்திவேலைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.

கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவில் சக்திவேல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, சோனியா தகவலளித்ததன் பேரில் ஆகாஷும் குமரவேலும் வீட்டிற்குள் புகுந்தனர். சோனியாவும் குமரவேலும் சக்திவேலின் கை, கால்களைப் பிடித்துக் கொள்ள, ஆகாஷ் தலையணையால் முகத்தை அமுக்கிக் கொலை செய்ய முயன்றார். எனினும், மூவரிடமிருந்தும் போராடித் தப்பிய சக்திவேல், கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியோடு உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், வெளியூருக்குத் தப்பியோட முயன்ற சோனியா மற்றும் ஆகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள குமரவேலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.