“ஒரு உயிரின் விலை 100 ரூபாயா..?” காசுக்காகத் தாயின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்ற மகன்… கொலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!

By Soundarya on மாசி 24, 2026

Spread the love

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், வெறும் 100 ரூபாய் பணத்திற்காகப் பெற்ற தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமபரோஸ் ராவத் என்ற நபர், தனது தாய் சுமித்ரா தேவியிடம் மது அருந்துவதற்காக 100 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், தாயிடம் பணம் இல்லாததால் கொடுக்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தப்பியோட முயன்ற மகனைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், குடிபோதையில் இத்தகைய பாதகத்தைச் செய்திருப்பதும் தெரியவந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், மகனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெறும் 100 ரூபாய்க்காகத் தாயின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.