“எவன் கூட டி போன்ல பேசுற”… மனைவி, 2 குழந்தைகளை வெட்டி கூறு போட்ட கொடூர கணவன்…. ரத்த வெள்ளத்தில் நிறைந்த படுக்கை அறை….!

By Nanthini on மாசி 24, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் சந்தேகத்தின் பெயரில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விவசாயி ஒருவரே கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாலூர் மாவட்டம் பின்மல் கிராமத்தைச் சேர்ந்த மங்களாரம் (40) என்பவருக்கும், தாத்மி (38) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். வாழ்வாதாரத்திற்காக வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த மங்களாரம், அடிக்கடி தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

சம்பவத்தன்று, தாத்மி நீண்ட நேரமாக வேறொருவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தது மங்களாரமுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேட்டபோது தனது தாயுடன் பேசியதாக தாத்மி கூறியுள்ளார். இருப்பினும், மங்களாரமுக்கு அந்தப் பதில் திருப்தி அளிக்காததால், இருவருக்கும் இடையே போன் மூலமாகவே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்த மங்களாரம், தனது மனைவி தொடர்ந்து செல்போனைப் பயன்படுத்துவதைக் கண்டு ஆத்திரமடைந்து மீண்டும் தகராறு செய்துள்ளார்.

   

கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றிருந்த நள்ளிரவு நேரத்தில், கணவன் – மனைவி இடையே மீண்டும் கடும் மோதல் வெடித்தது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மங்களாரம், மறைத்து வைத்திருந்த கோடாரியால் தனது மனைவியை வெட்டிப் படுகொலை செய்தார். அத்துடன் நில்லாமல், கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகள் மற்றும் கடைசி மகனையும் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர், ஏதும் தெரியாதது போல போலீசாருக்கு போன் செய்து, மர்ம நபர்கள் தனது குடும்பத்தைக் கொன்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார்.

   

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் மங்களாரத்தின் பேச்சில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருப்பதைக்கண்டனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, சந்தேகத்தின் காரணமாகத் தானே இந்தக் கொலையைச் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், கொலை செய்த பிறகு அவர் ஆவேசத்தில் நடனமாடியதாகத் தெரியவந்தது போலீசாரையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மங்களாரத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.