மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அசோக் விஹார் காலனியில், 75 வயதான முதிய தாய் மித்ரா விஸ்வகர்மா என்பவரை அவரது சொந்த மகனே நடுரோட்டில் இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்த கொடூர நிகழ்வு, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பும் ஆத்திரமும் உருவாகியுள்ளது.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜு விஸ்வகர்மா என்பவர், தனது தாயை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த அந்தப் மூதாட்டியை, மகன் துரத்திச் சென்று வீதியின் நடுவே முடியைப் பிடித்து இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைச் சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்த நிலையில், தடுக்க முயன்ற அண்டை வீட்டாரையும் ராஜு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தொடர்ந்து மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வந்தவர் என்றும், காவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த சிசிடிவி ஆதாரங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கும் அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் உமேஷ் கோல்ஹானி, சம்பவ இடத்திற்குச் காவல்துறையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி ராஜு விஸ்வகர்மா மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…