பிம்ப்ரி-சிஞ்ச்வாடில் உள்ள செக்டார் 12 பகுதியில் இயங்கும் ஒரு குடியிருப்பு வளாகத்தில், வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் 5 முதல் 6 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது பொம்மை மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் சக்கரத்தின் கீழ் சிக்கிப் பலத்த காயமடைந்தார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சியூட்டும் காட்சியின்படி, கார் திடீரென திரும்பியபோது சிறுமி அதன் பாதையில் வந்து சக்கரத்தின் அடியில் விழுந்துள்ளார். டிரைவரின் பார்வைக்குத் தெரியாத ‘பிளைண்ட் ஸ்பாட்’ பகுதியில் சிறுமி இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்தைத் தொடர்ந்து உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி, சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
எம்ஐடிசி போசாரி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் கணேஷ் ஜாம்தார் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுவரை காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்காததால் அதிகாரப்பூர்வமாகக் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், இருப்பினும் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு, இச்சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…