“ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… இரவில் கேட்ட பயங்கர சத்தம்… எக்ஸ்பிரஸில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!

Spread the love

டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கிச் சென்ற சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் கால்சினியைச் சேர்ந்த 20 வயது பழங்குடியினப் பெண், டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்புவதற்காகப் பழைய டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறியுள்ளார். கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

பயணத்தின் தொடக்கத்தில் அந்தப் பெட்டியில் மற்ற பயணிகளும் இருந்த நிலையில், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் அவர்கள் அனைவரும் இறங்கிவிட்டனர். ரயில் ஹசிமாரா நிலையத்தைக் கடந்தபோது அந்தப் பெட்டியில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிலிகுரி சந்திப்பில் ரயிலில் ஏறிய அசாம் மாநிலம் ரங்கியாவைச் சேர்ந்த 30 வயதான கவுதம் மகதோ என்பவன், பெட்டி காலியாக இருப்பதை நோட்டமிட்டு உள்ளே புகுந்துள்ளான். அங்கு தனியாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாகத் தாக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்த பெட்டியில் பயணித்த ரயில்வே மின்சாரப் பிரிவு ஊழியர்கள் உடனடியாக விழித்துக் கொண்டனர். அவர்கள் தாமதிக்காமல் ‘ரயில் மதத்’ என்ற ரயில்வே அவசர உதவிச் சேவை மூலம் உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதே நேரத்தில், படுகாயமடைந்த அந்தப் பெண்ணும் துணிச்சலுடன் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த கொடுமையைக் கூறியுள்ளார். இந்தத் தகவலின் பேரில் அலிப்பூர்துவார் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அரசு ரயில்வே போலீசாரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.

இரவு 9.20 மணியளவில் ரயில் அலிப்பூர்துவார் நிலையத்திற்கு வந்தடைந்ததும், காவல்துறையினர் ரயிலைச் சுற்றி வளைத்துக் குற்றவாளி கவுதம் மகதோவைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். தீவிர காயமடைந்த அப்பெண் உடனடியாக அலிப்பூர்துவார் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் குற்றவாளி உடனடியாகப் பிடிபட்ட போதிலும், ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

6 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

6 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago