பிரபல காமெடி நடிகரான செந்திலுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு கூறிய செய்திகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் செந்தில் மகன் மருத்துவராகி பலருக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். அவரது குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் இல்லையாம்.

மணிகண்ட பிரபு படித்துக் கொண்டிருந்தபோது ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில் மணிகண்ட பிரபு ஜனனி என்ற பல் மருத்துவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜனனியின் அப்பா ஒரு டாக்டருக்கு தான் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் மணிகண்ட பிரபு படித்து பல் மருத்துவரானார். அதன் பிறகு இரு வீட்டார் சம்பந்தத்துடன் இருவரும் திருமணம் செய்துள்ளனர். செந்தில் வீட்டில் பெண் குழந்தைகள் இல்லை. இதனால் தனது மருமகளை பாசமாக பார்த்து கொள்கின்றனர்.

செந்திலின் ஆசைப்படி மணிகண்ட பிரபு டாக்டரானார். தற்போது செந்தில் டென்டல் கேர் சென்டர் என்ற தனது தந்தை பெயரிலேயே மணிகண்ட பிரபு சென்னையில் கிளினிக் நடத்தி வருகிறார். மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மணிகண்ட பிரபு குறிக்கோளாக கொண்டுள்ளார்.

