“அப்பா எங்களை ஆசீர்வாதம் பண்ணு” மறைந்த தனது தந்தை ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு… திருமணம் செய்துகொண்ட 2 ஆவது மகன்…!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மறைந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்த நிலையில் உடல் முன்பு, அவரது 2வது மகன் அஜித் ராஜா ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணை இன்று  திருமணம் செய்துகொண்டுள்ளார். பிஎஸ்பி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து வியாசர்பாடியில் வீட்டில் அஞ்சலிக்குப் பிறகு மதியம் 2 மணிக்கு முல்லை நகர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.