ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்… போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் திடீரென்று உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதால் இந்த கட்டண உயர்வு தங்களை பாதிப்பதாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டண வசூலைக் கண்காணிப்பதற்கு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.