ஈரோடு மாவட்டம் அனுமன்பள்ளி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இவரது மனைவி தனபாக்கியம் அனுமன்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர். இந்த தம்பதியினருக்கு செந்தில், சந்தோஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது செந்தில் திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். சந்தோஷத்திற்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இந்த நிலையில் செந்தில் தனியாக வீடு கட்டி வருகிறார். அவருக்கு தனபாக்கியமும், கிருஷ்ணமூர்த்தியும் பணம் கொடுத்து உதவி செய்தனர். இதனை அறிந்த சந்தோஷ் அண்ணனுக்கு வீடு கட்டுவதற்கு பணம் கொடுக்கிறீர்கள். அந்த வீட்டை அண்ணன் கிட்ட கேட்டு என் பேருக்கு எழுதி தாங்க என கேட்டு சண்டை போட்டுள்ளார்.
அதற்கு தனபாக்கியம் உனக்கு வேறு சில சொத்துக்களை எழுதி வைக்கிறோம் என உறுதி அளித்தார். இருப்பினும் சந்தோஷ் வீட்டை கேட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. நேற்று ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் தனது தாயின் முகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷ் குமாரை தேடி வருகின்றனர்.
