தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்தான் அஜித். தனக்கென்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய வைத்திருக்கும் அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு, கார் மற்றும் பைக் ரேஸ் என பல போட்டிகளில் தன்னை நிரூபித்து வருகின்றார். துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்திற்காக தனி அணியை உருவாக்கிய அஜித் அந்த போட்டியில் பங்கேற்ற இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். இதனிடையே இந்த ஆண்டில் இவருடைய நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளது. சினிமாவை கடந்து விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் அஜித் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்த சாதித்தார். அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெறும் கார்பந்தயப் போட்டியில் அஜித் தன்னுடைய ரேசிங் அணியுடன் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் அஜித் சமீபத்தில் தரிசனம் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டை புகைப்படத்திற்கும் நேர்காணலுக்கும் அஜித் படபிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் மாதத்திற்கான இதழில் அஜித் குறித்த பலரும் அறிந்திடாத தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
Exclusive: Watch #AjithKumar (@Akracingoffl) in action during our cover shoot.
Read the full interview in #THRIndia’s November print issue.
Location: Dubai Autodrome #TheHollywoodReporterIndia #Ajith #AjithKumarRacing pic.twitter.com/DhLNXt8LJb
— The Hollywood Reporter India (@THRIndia_) October 31, 2025
