“2 பொண்டாட்டி, 4 குழந்தைகள்”… மாமனார் வீட்டில் புகுந்து மருமகன் செய்த வெறிச்செயல்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்பத் தகராறில் மாமனார் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ரவி என்பவர் மாட்டு வண்டி ஓட்டித் தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இவரது மகள் பிரீத்தி, அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சதீஷ் (33) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், முதல் மனைவியைப் பிரிந்து பிரீத்தியை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு நான்கு வயது மற்றும் நான்கு மாதங்களில் இரு குழந்தைகள் உள்ளனர்.

சதீஷ் மது பழக்கத்திற்கு அடிமையானதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பிரீத்தி, தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியதுடன், சதீஷிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய விரும்பி விவாகரத்து நோட்டீஸும் அனுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ், நேற்று மதுபோதையில் தனது மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தட்டிக் கேட்ட மாமனார் ரவிக்கும் மருமகன் சதீஷிற்கும் இடையே மோதல் வெடித்தது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தனது வீட்டிற்குச் சென்ற சதீஷ், அங்கு சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து மாமனார் ரவியை நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் ரவி இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்துத் தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சதீஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொலையாளி சதீஷ், திமுக கிளைச் செயலாளர் குமுதா வெங்கடேசனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சட்டவிரோத ஆயுதங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்துவதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“அமெரிக்காவில் இருந்து வந்த போன்கால்”…. விக்கிரவாண்டி மேடையில் அன்புமணி போட்ட வெடி…. சௌமியா அன்புமணிக்கு ஃபேன்ஸ் கிளப்….!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…

3 minutes ago

ரூ.100 கோடி பள்ளி மோசடி வழக்கு…. “177 பள்ளிகள், 49 வங்கி கணக்குகள் முடக்கம்”…. விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ்…. இன்று காத்திருக்கும் டுவிஸ்ட்….!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடி வரை நிதி மோசடி செய்ததாக…

13 minutes ago

ராகுல் காந்திக்கு செக்?…. டெல்லி அரசியலில் திமுகவின் மாஸ்டர் பிளான்…. 3-வது அணி அமைக்க போராடும் ஸ்டாலின்…!

தேசிய அரசியலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு 3-வது அணியை உருவாக்க திமுக எடுக்கும் முயற்சிகள் பலனளிப்பது கடினம்…

25 minutes ago

இன்னும் 48 மணி நேரத்தில்… வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்…. 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த…

30 minutes ago

“தமிழிசை, சீமானை வீழ்த்தியவர்களுக்கெல்லாம் பதவி… ஆனா எனக்கு?”…. VS பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு உண்மை….!

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தீவிர மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும்…

35 minutes ago

விக்கிரவாண்டி வரிசையில் திண்டுக்கல்… 2 அரசு பேருந்துகள் பயங்கர மோதல்… ரத்த வெள்ளத்தில் பயணிகள்…!

விக்கிரவாண்டியைத் தொடர்ந்து திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

38 minutes ago