“எனக்கு அத்தை தான் வேணும்…” 5 பிள்ளைகளின் தாயுடன் காதல்… மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி சிட்டி கொத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 5 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் தனது சொந்த மருமகனைக் காதலித்து, அவருடன் குடும்பம் நடத்த ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அப்பகுதியையே உலுக்கியுள்ளது.

5 பிள்ளைகளுக்குத் தாயான அந்த பெண்ணுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே கடந்த சில காலமாகவே ரகசியக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இவர்களின் அருவருப்பான கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்து வீட்டில் மாபெரும் புயலைக் கிளப்பியது.

   

இதனிடையே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போது, தகவலறிந்து ஓடோடி வந்த அப்பெண்ணின் பிள்ளைகள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து நடுரோட்டில் வைத்து ரணகளம் செய்தனர். போலிஸார் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் ஆஜரான அந்த மாமியாரும் மருமகனும், கொஞ்சமும் வெட்கமின்றி “நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் வாழ்வோம்” என பகிரங்கமாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிள்ளைகளின் எதிர்ப்பையும் மீறி மாமியாருடன் வாழத் துடிக்கும் மருமகனின் இந்த வக்கிரக் கூத்து அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.