அடக்கடவுளே..! “தந்தை சொன்ன அந்த ஒரு வார்த்தை” விஷத்தை குடித்து உயிரை விட்ட இளைஞர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில், தந்தையின் மதுப்பழக்கம் மற்றும் தவறான நடத்தையால் மனமுடைந்த 22 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஸ்வாடா கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மண்டலோய் என்ற அந்த இளைஞர், தனது தந்தையின் குடிப்பழக்கம் மற்றும் அவர் மீது சுமத்தப்பட்ட திருட்டுப் புகார்களால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சமீபத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய தனது தந்தையை, பிரவீன் 10,000 ரூபாய் பிணைத் தொகை செலுத்தி காவல் நிலையத்திலிருந்து மீட்டு வந்துள்ளார். தனது தந்தை திருந்துவார் என்று எதிர்பார்த்த பிரவீனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் மது அருந்திய தந்தையைக் கண்டித்தபோது, அவர் மதுப்பழக்கத்தைக் கைவிட மறுத்ததுடன், “உனக்கு சாக வேண்டும் என்று தோன்றினால் போய் சாவு” என்று கோபத்தில் கூறியுள்ளார். தந்தையின் இந்த வார்த்தைகளால் கடும் வேதனையடைந்த பிரவீன், விஷம் குடித்துத் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

கொரோனா காலத்தில் தனது தாயை இழந்த பிரவீன், அன்று முதல் தனது தந்தை மற்றும் சகோதரியின் பொறுப்புகளைத் தானே சுமந்து வந்துள்ளார். குடும்ப பாரத்தை இழுத்து வந்த நிலையில், தந்தையின் பொறுப்பற்ற செயலால் ஒரு இளம் உயிர் பறிபோயுள்ளது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

26 seconds ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

4 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

9 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

17 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

24 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

28 minutes ago