“அக்கா, அம்மா என்னை திட்டிடுச்சு, நான் பூச்சி மருந்து குடித்துவிட்டேன்”… 9 ஆம் வகுப்பு சிறுவன் எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

ஆம்பூர் அருகே பள்ளிக்கு செல்லுமாறு தாய் கூறியதால் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாத கடப்பா பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவருடைய மகன் அருள். இவர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவருடைய தாய் உஷா மகனை பள்ளிக்கு செல்லாததால் திட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதனால் அருள் வீட்டில் செடிகளுக்கு கிடைக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டிலேயே படுத்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த சகோதரி எதற்காக படுத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டதற்கு அம்மா திட்டியதால் நான் பூச்சி மருந்து குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரி நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தம்பியை நீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மகனை பள்ளிக்கு செல்லுமாறு தாய் திட்டியதால் சிறுவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.