தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியினரை மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரசியலில் அனுபவம் வாய்ந்த முக்கிய புள்ளிகள் பலரும் மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது.
இந்நிலையில் தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை கலைத்து விட்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி தனது கட்சியின் தொண்டர்களை ஜி கே வாசனின் தமாகாவில் இணைக்க போவதாக குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு காந்திய மக்கள் இயக்கத்தை தொடங்கியவர் 2014 ஆம் ஆண்டு அதனை காந்திய மக்கள் கட்சியாக மாற்றினார். தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் தனது கட்சி பெயரை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றி இருந்தார். தற்போது இவர் தனது கட்சியை கலைக்க உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
