அடச்சீ… சொத்துக்காக பெற்ற தாயை… டம்பல்ஸால் அடித்தே கொன்ற மகன்… நெஞ்சை பதறவைக்கும் துயரம்… திருச்சியில் பரபரப்பு…!

Spread the love

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தாய் செல்வியுடன் வாழ்ந்து வந்துள்ளார். பெற்றோர் தங்கள் சொத்தை மற்ற இரண்டு சகோதரர்களுக்கு மட்டும் பிரித்துக் கொடுத்ததாகக் கூறி, தனக்கும் சொத்தில் பங்கு கேட்டு வெங்கடேசன் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன் மீண்டும் தாயிடம் சொத்தைப் பிரித்துக் தருமாறு தகராறு செய்துள்ளார். அதற்கு செல்வி, “நீ வேலைக்குச் செல்லாமல் எப்போதும் குடித்துவிட்டு இருப்பதால் உனக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த உடற்பயிற்சி டம்பல்ஸால் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் செல்வியின் மூளை சிதறும் அளவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த செல்வியை உறவினர்கள் உடனடியாக மீட்டுத் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை போலீசார், வெங்கடேசனைக் கைது செய்தனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், பெற்ற தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

6 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

6 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago