மக்களே உஷார்… “இவர்களும் கூட்டணிதான்…” நம்பவே முடியல… போதை நெட்வொர்க்கில் சிக்கிய டாக்டர், டீச்சர்கள்… உறைந்துபோன கேரளா… சமுதாயத்தை உலுக்கிய உண்மை சம்பவம்…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிஸ்வான் என்பவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் சில பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள போதை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கைதான ரிஸ்வானின் செல்பேசியை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து சில ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும், இந்தச் சட்டவிரோத வலையமைப்பில் சில மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேற்காசிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேசக் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

   

சமுதாயத்திற்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியர்களும், மனித உயிர்களைக் காக்க வேண்டிய மருத்துவர்களும் இதுபோன்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தைக் சிதைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் தொடர்புடையவர்கள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.