ஐஐடி மாணவரின் அதிர்ச்சி மரணம்… கதறும் பெற்றோர்… விடுதி அறையில் நேர்ந்த சோகம்… தற்கொலைக்குக் காரணம் இதுதான்?… மாணவர் விபரீத முடிவு…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

மும்பை பவாய் வளாகத்தில் உள்ள ஐஐடி பம்பாய் விடுதி அறையில் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயதுடைய இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் படித்து வந்த இந்த மாணவர், வழக்கம்போல் அன்றைய தினம் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு மாலையில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். ஆனால், மாலை 5 மணிக்குப் பிறகு பெற்றோரின் அலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனடியாக ஐஐடி பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததுடன், ஜன்னல் வழியாகப் பார்த்ததில் மாணவர் மின்விசிறியில் தொங்குவது கண்டறியப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பவாய் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது தொடர்பாக விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பான மன உளைச்சலே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. எனினும், சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலை குறிப்பும் கிடைக்காததால், மாணவரின் அலைபேசியைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் இருந்து பெற்றோர் மும்பை வந்துள்ள நிலையில், இத்தகைய சோகச் சம்பவங்கள் கல்வி வளாகங்களில் தொடர்வது மாணவர்களிடையே மனநல ஆதரவின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.