ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது.

அது மட்டுமல்லாமல் லஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.


இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. அதாவது இவர் மேல் தட்டு வருக அரசியலை தூக்கி பிடிக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இவர் தற்போது தான் இயக்கம் புது படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்துள்ளார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.


இப்படத்தில் சமுத்திரகனி, அபிராமி,ரோபோ சங்கர் மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இதனிடையே லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஷ்ரதா, ஸ்ருதி மற்றும் ஸ்ரேயா என மூன்று மகள்கள் உள்ளனர்.


அவரவர் கேரியரில் பிஸியாக இருந்து வருகிறார்கள். ஷ்ரத்தாவுக்கு திருமணம் ஆகி ஏற்கனவே குழந்தைகள் உள்ளன.


அவரின் மகள் சுரேயாவுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரி இல்லை. 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இடம் சிகிச்சை பெற்று தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

