முதலாம் ஆண்டு திருமண நாளை 2ஆம் மனைவியுடன் கொண்டாடிய டி.இமான்…. வைரலாகும் புகைப்படங்கள்…

By Archana on வைகாசி 17, 2023

Spread the love

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டி.இமான். இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

   

அதன் பிறகு ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

 

இதனிடையே இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தனது மனைவியை இமான் விவாகரத்து செய்து விட்டார்.

அதுவும் விவாகரத்து செய்து ஓராண்டுக்கு பிறகு தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். பிரபல கலை இயக்குனர் உபாால்டுவின் மகள் எமிலி என்பவரை இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரை மறுமணம் செய்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தனது இரண்டாம் திருமணத்தின் முதல் திருமண நாளை முன்னிட்டு தனது இரண்டாவது மனைவி மற்றும் அவரின் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் நாமும் நம்முடைய குடும்பமும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு இன்றோடு ஓராண்டுகள் ஆகிவிட்டது, என் மனைவியாக குடும்பத்தை மீண்டும் உருவாக்கி இருக்கிறாய் என மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது அவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்டு அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.