“நாங்க சும்மாதான் Try பண்ணோம்.. ஆனா நடந்த அதிசயம்”…. CM Cell-ஆல் உயிர் பிழைத்த வாலிபர் நெகிழ்ச்சி…!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்த ஐந்து நாட்களிலேயே தனது நண்பனின் உயிர் காக்கும் மாதாந்திர மருந்து ஊசிகள் கிடைக்கப் பெற்றதாக வாலிபர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அந்த மருந்து கிடைக்காமல் ஏமாற்றமடைந்த நிலையில், தங்களின் இறுதி முயற்சியாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெறும் ஐந்தே நாட்களில் தங்களுக்குத் தேவையான 20 ஊசிகளும் கிடங்கிற்கு அனுப்பப்பட்டதாக முதலமைச்சரிடம் இருந்தே நேரடியாகக் கடிதம் வந்ததாகக் கூறியுள்ளார்.

சும்மாதான் முயற்சி செய்து பார்த்தோம், ஆனால் இந்த வேகம் மற்றும் உடனடித் தீர்வு தங்களை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்ட அந்த இளைஞர், “விஜய் சார் சொன்ன மாதிரியே (சொன்னதைச் செய்வார்கள் என்ற பாணியில்) உடனே செஞ்சிருக்காங்க” என நெகிழ்ச்சியோடு தனது நன்றியைப் பகிர்ந்துள்ளார்.