மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், தனது மனைவி ராதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் வெளியூர் மற்றும் டேங்க் பண்ட் பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

மழை காரணமாகத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், மனைவி ராதிகா தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் வெளியே சென்றுள்ளார். ரமேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென ரமேஷ் தனது மனைவிக்கு, “ஏதேனும் தவறு நடந்திருந்தால் என்னை மன்னித்து விடு… குட்பை” என்று உருக்கமாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.

   

மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, ரமேஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த குகட்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மென்பொருள் ஊழியரின் தற்கொலைக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.