தமிழக அரசால் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் முதியோர், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,200-உம், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500-உம் நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக விளங்கும் இந்த மாதாந்திர உதவித்தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி வரும் செப்டம்பர் 2026 முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இனிவரும் மாதங்களில் பயனாளிகளின் ஆதார் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே நிதியுதவித்தொகை நேரடியாக அனுப்பப்படும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயன்பெறும் அனைத்துப் பயனாளிகளும் தங்களது உதவித்தொகை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதிசெய்ய, உடனடியாக தங்களது வங்கிக் கிளைகளை அணுகி வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆதார் இணைப்பு இல்லாத பட்சத்தில் மாதாந்திர உதவித்தொகை தற்காலிகமாகத் தடைபட வாய்ப்புள்ளது.
இது தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் தேவையான உதவிகளைப் பெறவும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறப்புத் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் அல்லது அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தனி வட்டாட்சியர் மையங்களை அணுகலாம். பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு நிதி போய்ச்சேருவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள கங்கனானி பகுதியில், கர்மகுண்டிலிருந்து டப்ரானி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று திடீரென…
பிஞ்சுக் குழந்தையின் மீது நடத்தப்படும் எத்தகைய வன்முறையும் மனிதநேயத்திற்கே பெரும் இழுக்காகும். தற்காத்துக் கொள்ளத் திராணியற்ற ஒரு சிறு குழந்தையின்…
அஹுவாகாட்லான் பகுதியில் உள்ள பொது இடத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட பள்ளி மாணவர்கள் மூவரை உள்ளூர் பாதுகாப்புப் படையினர்…
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள அகலா கிராமப் பகுதியில், ஒரே இடத்தில் நான்கு புலிகள் நடமாடுவது அங்கு பறக்கவிடப்பட்ட…
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்திற்குட்பட்ட மஹமதாபாத் - பிதாய் வழித்தடத்தில் இயங்கி வரும் 'கோடல் ஜெனரல் ஹார்டுவேர் அண்ட் பஞ்சர்…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக…