7 மாத கர்ப்பிணியா?… மரத்தில் கட்டி தீவைக்கப்பட்ட பெண் பிரபலம்… இன்ஃப்ளூயென்சர் மரணத்தில் உடையும் மர்மங்கள்… பஞ்சாப்பை உலுக்கிய கொடூரம்…!!

By Gayathri on ஆவணி 31, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக வலைத்தளப் பிரபலமான 28 வயது மஞ்ஜீத் கவுர், கடந்த ஜூலை 3-ம் தேதி சண்டிகர் செக்டார் 34 பகுதியில் தனக்கு அறிமுகமான சுபி மற்றும் பிண்டா ஆகியோரால் காரில் கடத்தப்பட்டார். மொரிண்டா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, கொடூரமாகத் தாக்கி ஒரு மரத்தில் கட்டிவைத்துத் தீ வைத்துள்ளனர். அவரது நண்பர் ஒருவர் போர்வையால் தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மொரிண்டா, மொஹாலி மற்றும் சண்டிகர் என அடுத்தடுத்து பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கவுரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தக் கொடூரத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற மஞ்ஜீத் கவுரின் மகன் அவரது முன்னாள் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த கவுர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.