Categories: சினிமா

அந்த விஷயத்துல அவர அடிச்சுக்க ஆளே இல்ல… நடுராத்திரியில் போன் பண்ணி சினேகனைப் மனம் குளிரவைத்த SPB!

Spread the love

இந்திய சினிமாவில் அதிக பாடல்களை பாடிய ஆண் பாடகர் என்ற பெருமைக்குரியவர் எஸ் பி பாலசுப்ரமணியன்.  இவர் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ் பி பி சென்னையில் படிக்கும்போது பாடல்கள் பாடுவதில் ஆர்வம கொண்டு அதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார். அவருக்கு முதலில் பாட வாய்ப்புக் கிடைத்தது தெலுங்கு சினிமாவில்தான்.

1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

SPB and Yesudas

எம் ஜி ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலை பாடிய பின்னர் கவனிக்கப்படும் பாடகர் ஆனார். ஆனால் அவர் உச்சத்துக்கு சென்றது இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்றால் அது எஸ் பி பிதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அது இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மரணமாக இருக்கிறது.

அவரைப் பற்றி அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் எப்பேர்ப்பட்ட மனிதர் அவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பாடல் ஆசிரியர் சினேகன் எஸ் பிபியின் பாராட்டும் குணத்தைப் பற்றி சிலாகித்து ஒரு சம்பவத்தைப் பேசியுள்ளார். அதில் “ஒரு நாள் நள்ளிரவில் எனக்கு போன் பண்ணி பேசினார் SPB ஐயா. அப்போது என்னிடம் ‘நான் ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் சினேகன். அந்த நிகழ்ச்சியில் நீங்கள் எழுதிய ஒரு பாடலை ஒருவர் பாடினார். அதைக் கேட்ட எல்லோருமே கண் கலங்கி விட்டார்கள். நானும் கூட. எனக்கும் என் அம்மாவின் நினைவு வந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் உங்களை உடனே அழைத்துப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அதுதான் நள்ளிரவு என்றாலும் பராவியில்லை என்று அழைத்தேன்’ என சொன்னார்.

Aarario song in Ram movie

அந்த பாடல் ராம் படத்தில் நான் எழுதிய “ஆரோரிரோ நான் இங்கு பாட… தாயே நீ கண்ணுறங்கு என்ற பாடல்…” யேசுதாஸ் பாடியது. நான் எழுதிய பாடல்களில் 50க்கும் மேல் SPB ஐயா பாடியிருப்பார். ஆனால் அவர் பாடாத ஒரு பாடலை சிலாகித்துப் பேசுகிறார் என்றால் அவர் எவ்வளவு உன்னதக் கலைஞனாக இருப்பார் என்று பாருங்கள்” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

33 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

38 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

43 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

46 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

50 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

52 minutes ago