Categories: சினிமா

ரோஜா படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இல்லாமல் இன்னொரு ஆப்ஷனும் வைத்திருந்தார் மணிரத்னம்… அவர் யார் தெரியுமா?

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

Manirathnam and A R Rahma

ரோஜா படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, அந்த படத்தை தயாரித்தார் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். அவரின் கவிதாலயா பிலிம்ஸ் அப்போது இளையராஜாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கள் மூன்று படங்களுக்கு மூன்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்தது. அப்படிதான் ரோஜா படத்துக்குள் வந்தார் ரஹ்மான்.

அப்போது மணிரத்னமும் இளையராஜா மீது அதிருப்தியில் இருந்ததால் வேறு இசையமைப்பாளரிடம் செல்லலாம் என நினைத்தாராம். அந்த நேரத்தில் அவர் ரோஜா படத்துக்கு இரண்டு இசையமைப்பாளர்களை மனதில் வைத்திருந்தாராம். ஒருவர்தான் அப்போது திலீப் குமாராக இருந்த ஏ ஆர் ரஹ்மான். இன்னொருவர் எல் வைத்தியநாதன் எனும் வயலின் கலைஞர். அவர்கள் இரண்டு பேரில் ஒருவரை இசையமைப்பாளராக போடலாம் என தயாரிப்பு நிறுவனத்துக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

L Vaidhyanadhan

இதில் முதலில் தயாரிப்பு நிறுவனத்தைச் சென்று பார்த்த ரஹ்மான், தன்னுடைய ட்யூனால் தயாரிப்பாளர்களை அசத்திவிடவே, அவரையே இசையமைப்பாளர் ஆக்கியுள்ளனர். எல் வைத்தியநாதன் தமிழ் சினிமால் 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். ஆனால் பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை. 1942 ஆம் ஆண்டு பிறந்த அவர் 2007 ஆம் ஆண்டு காலமானார்.

 

vinoth

Recent Posts

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

19 seconds ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

4 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

8 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

13 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

26 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

32 minutes ago