பிரபல பாடலாசிரியரான சினேகன் புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
இதுவரை சினேகன் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சினேகன் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தார். சினேகன் நடிகை கன்னிகாவை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் கன்னிகா கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு தேவராட்டம், சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அன்பாக இருப்பார்கள்.
இந்நிலையில் சினேகன் தனது தந்தையின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவிலுக்கு சென்று பூஜை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram