Categories: சினிமா

வைரமுத்துவுக்கு என் மேல் அப்படி என்ன கோபம்?.. அந்த சம்பவத்த மறக்கவே மாட்டேன் – எமோஷனலாக பேசிய சினேகன்!

Spread the love

1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகம் ஆனவர் வைரமுத்து. அப்போது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

snehan

ஆனாலும் ரஹ்மானின் வருகைக்குப் பிறகு வைரமுத்து தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கி இப்போது வரை முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கிறார். வைரமுத்துவிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றி வந்தார் சினேகன். ஆனால் அவர் ஒரு கவிஞர் என்பதும் பின்னாளில் பாடல் ஆசிரியராக வருவார் என்பதும் அவருக்கேத் தெரியாதாம்.

ஆனால் வைரமுத்துவோடு ஏற்பட்ட ஒரு சிறு பிணக்குக் காரணமாக சினேகன் அவரை விட்டு பிரிந்துள்ளார். அதன் பின்னர் அவர் பாடல் ஆசிரியர் ஆனபோதும் எப்போதும் அவரைப் பாராட்டியதே இல்லையாம். மேலும் இரண்டும் பேரும் சேர்ந்து ஒரு படத்துக்கு பாடல் எழுத வேண்டிய சூழல் வந்தால் “சினேகன் எழுதினா, நான் எழுத மாட்டேன்” என வெளிப்படையாக சொல்லியுள்ளாராம். இதனால் பல பட வாய்ப்புகளை தான் இழந்துள்ளதாக சினேகன் தெரிவித்துள்ளார்.

vairamuthu

மேலும் “நான் முதல் முதலாக கவிதைப் புத்தகம் வெளியிட்ட போது அதில் வைரமுத்து வந்து கலந்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். இதற்காக புத்தகத்தைக் கொண்டு போய் கொடுத்து மூன்று மாதம் காத்திருந்தேன். ஆனால் மூன்றுமாதம் கழித்து நான் ஊரில் இருந்தால் வருகிறேன் என்றும் வேண்டுமானால் வைரமுத்துவின் ஆசிகளோடு என்று போட்டுக்கொள்ள சொன்னார்கள். ஆனால் நான் “சினேகன் விழாவுக்கு வருகிற வைரமுத்துதான் வேண்டும். ஊரில் இல்லாத வைரமுத்து வேண்டாம் என சொல்லிவிட்டேன்” என எமோஷனலாக பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

31 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

36 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

40 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

43 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

47 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

49 minutes ago