அம்மாடியோ..! வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் நெளிந்த 27 பாம்புகள்… உள்ளே நுழைந்தது எப்படி..? அலறிய வீட்டின் உரிமையாளர்.. பகீர் வீடியோ வைரல்..!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில், தண்ணீர் தொட்டிக்குள் இருந்து ஒரே நேரத்தில் 27 பாம்புகள் அடுத்தடுத்து வெளியே வந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த வீட்டின் குழாய்களில் தண்ணீர் வரத்து தடைபட்டதைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர்கள் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியைத் திறந்து சோதித்துப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே ஏராளமான பாம்புகள் நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் நிலைகுலைந்து போயினர் . உடனடியாக இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது .

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தொட்டிக்குள் இருந்த அனைத்துப் பாம்புகளையும் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பாக மீட்டனர் . மீட்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டன . கோடைக் கால வெப்பத்தின் காரணமாகக் குளிர்ந்த இடத்தைத் தேடியோ அல்லது தவளை போன்ற இரைகளைத் துரத்திக்கொண்டோ இந்த பாம்புகள் பைப் லைன் வழியாகத் தொட்டிக்குள் நுழைந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் ஹரித்வார் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Soundarya

Recent Posts

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

9 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

17 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

19 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

25 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

47 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

59 minutes ago