இனி அலையவே தேவையில்லை!.. விண்ணப்பித்த 5 நாளில் சான்றிதழ்.. அமைச்சர் செங்கோட்டையன் தந்த செம அப்டேட்..!!

Spread the love

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, மற்றும் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சேவைகள் தற்பொழுது ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இவற்றைப் பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, உரிய ஆவணங்கள் கைக்கு வந்து சேர நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.

சென்னையில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் மக்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு சிறந்த ஆட்சியைத் தமிழகத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கில், தற்போது துறை வாரியாகத் தீவிர ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடனும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஜாதி சான்றிதழ் ஆகியவை விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய இன்று வருவாய்த்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார். மேலும் இனி ஆன்லைன் மூலம் ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தால், அந்தந்த வருவாய் வட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, ஐந்தே நாட்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

Muthu Mani

Recent Posts

அடச்சீ… குடிக்காதேனு சொன்னது குத்தமா?… பெற்ற தாயைக் காப்பாற்ற முயன்ற… தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வெறியன் மகன்… ஆந்திரப் பிரதேசத்தில் உலுக்கிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…

1 minute ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

31 minutes ago

“சாக்கடையில் விழுந்ததால் சண்டை…” 9 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற 11 வயது சிறுவன்…! நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…

39 minutes ago