கேட்ச்சை விட்டா மேட்ச் காலி… பாகிஸ்தான் செய்த ஒத்த தப்பு… அடுத்த நொடியே ஸ்மிருதி மந்தனா காட்டிய மரண மாஸ் ஆட்டம்.. உலகக் கோப்பையில் புதிய சாதனை..!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இப்போட்டியில் மந்தனா 27 ரன்கள் எடுத்திருந்தபோது, பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸ் கொடுத்த மிக எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இந்தத் தவறால் மந்தனாவை ஆரம்பத்திலேயே வீழ்த்த முடியாமல் போனது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது.

கிடைத்த இந்த ‘லைஃப்’ (மறுவாய்ப்பு) மூலம் மந்தனா விஸ்வரூபம் எடுத்தார். மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்த அவர், பாகிஸ்தானின் பந்துவீச்சை துவம்சம் செய்து தனது சர்வதேச டி20 வாழ்க்கையின் 34-வது அரைசதத்தை விளாசினார். மறுமுனையில் மற்ற இந்திய வீராங்கனைகள் ரன் குவிக்க சற்றே தடுமாறிய நிலையிலும், மந்தனா மிகவும் முதிர்ச்சியோடு விளையாடி ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டார்.

   

இந்த மிரட்டலான ஆட்டத்தின் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது 5-வது அரைசதத்தை மந்தனா பதிவு செய்துள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக அரைசதங்கள் (5 அரைசதங்கள்) அடித்த வீராங்கனைகள் பட்டியலில் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோருடன் இணைந்து மந்தனா முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டு புதிய சாதனை படைத்துள்ளார்.