இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை சில தினங்களுக்கு முன் உறுதி செய்தார். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருந்தது. இந்த வெற்றிக்கு ஸ்மிருதி மந்தனாவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். இதற்கிடையில் ஸ்மிருந்தி மந்தனா, பிரபல இந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.
जिथे टीम इंडियाने विश्वविजेतेपद जिंकून इतिहास रचला, त्याच ठिकाणी पलाश मुच्छलने स्मृतीला प्रपोज केले. हा व्हिडिओ सोशल मिडियावर तुफान व्हायरल होत आहे.#LokmatNews #PalashMuchhal #SmritiMandhana #Proposal #Love pic.twitter.com/iuW8b92Bqk
— Lokmat (@lokmat) November 21, 2025
இந்நிலையில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற மும்பை DY பாட்டில் மைதானத்தில் வைத்து கிரிக்கெட் வீராங்கனை காதலி ஸ்மிருதி மந்தனாவுக்கு காதலன் பலாஷ் மூச்சல் ப்ரொபோஸ் செய்துள்ளார். இருவருக்கும் வரும் 23ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
