BREAKING: ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்… சற்றுமுன் அதிரடி தீர்ப்பு..!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் X தளத்தில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை  ரத்து செய்தது உயர் நீதிமன்றம். உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டது என்று ஆதவ் அர்ஜூனா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், “புரட்சி ஏற்படும்” என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. இதனால், கலவரத்தை தூண்டியதாக ஆதவ் அர்ஜுனா மீது சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.