இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமண ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கிவிட்டதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருந்த இவர்களின் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்கள் இரு குடும்பத்தின் தனிப்பட்ட காரணங்களால் திருமணம் நின்றுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது மும்பையில் உள்ள உணவகம் ஒன்றின் வெளியே ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீநிவாஸை, பலாஷின் சகோதரி பாலக் முச்சல் மற்றும் அவரது கணவர் மிதுன் ஆகியோர் சந்தித்துப் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது, பாடகி பாலக் முச்சல் ஸ்மிருதியின் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்ட அந்த வீடியோ, ஸ்மிருதி மற்றும் பலாஷ் மீண்டும் ஒன்று சேரப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. திருமண முறிவு குறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு, இரு குடும்பத்தினரும் இவ்வளவு நெருக்கமாகச் சந்தித்துக் கொள்வது அவர்கள் மீண்டும் சமரசம் ஆகிவிட்டதையே காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் சந்திப்பு குறித்து இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…