“என் மனைவி ஒரு வாரம் என்னிடம் பேசவில்லை” அன்று நான் செய்த அந்த காரியம்… சத்தியம் செய்து நிரூபித்த CM ஸ்டாலின்..!!

Spread the love

விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். என்டிஏ (NDA) என்பது எந்த வளர்ச்சியும் இல்லாத கூட்டணி என்றும், தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் அக்கூட்டணியின் பொய்களுக்குப் புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, தனது மரணம் குறித்து இழிவாகப் பேசிய பழனிசாமிக்கு, “மரணத்தைப் பார்த்து கலங்கக்கூடியவன் நான் அல்ல” என முதலமைச்சர் காட்டமாகத் தெரிவித்தார்.

தனது அரசியல் பின்னணி மற்றும் துணிச்சலை நினைவுகூர்ந்த ஸ்டாலின், 1976-ம் ஆண்டிலேயே அதாவது எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறைக் கொடுமைகளை அனுபவித்தவன் என்று குறிப்பிட்டார். மேலும், கொரோனா காலத்தில் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து நேரடியாக வார்டுகளுக்கே சென்று மக்களைச் சந்தித்ததைச் சுட்டிக்காட்டினார். அதிகாரிகளிடமோ, குடும்பத்தினரிடமோ சொல்லாமல் உயிரைப் பணையம் வைத்துச் சென்றதால், தனது மனைவி துர்கா ஒரு வாரம் தன்னிடம் பேசாமல் கோபித்துக் கொண்டதாக உருக்கமாகக் குறிப்பிட்டார்.

தலைவர்களின் கண்ணியம் குறித்துப் பேசிய அவர், பெரியார், அண்ணா, காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற பண்பாடுமிக்கப் பெருந்தலைவர்களுடன் பழகிய நீண்ட அரசியல் அனுபவம் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார். அத்தகைய கண்ணியமான அரசியல் சூழலில் வளர்ந்த தான், இன்று தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

“ஒவ்வொரு மணி நேரமும் போன் போட்டு விசாரிப்பேன்”….. முதலமைச்சரின் உத்தரவும், அமைச்சரின் அதிரடி ஸ்பீடும்….!

மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…

8 minutes ago

கோவையில் என்ன நடக்குது?…. அரசியலை அதிர வைக்கும் செந்தில் பாலாஜியின் சைலன்ட் மூவ்…. அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில்…

23 minutes ago

“என்னிடம் 100 ஆடியோ ஆதாரங்கள் இருக்கு”…. விஜய்க்கு எதிராக மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகி…. தவெகவில் வெடித்த அடுத்தடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

38 minutes ago

விமான நிலையத்தில் ரூ.1 லட்சம் சம்பளம்…. ரூ.23 லட்சத்தை அப் அங் கையாண்ட ஓய்வுபெற்ற பெண் அதிகாரி…. சென்னையை நடுநடுங்க வைத்த சம்பவம்….!

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…

41 minutes ago

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

1 மணத்தியாலம் ago

“இனி தான் ஆட்டமே இருக்கு”…. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை….. வெதர்மேன் கொடுத்த அலெர்ட்….!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…

1 மணத்தியாலம் ago