தமிழக அரசியலில் களம் இறங்கிய குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டை தங்களுக்குப் பயன்படுத்தாமல் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி.சண்முகம், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக நினைத்திருந்தால் மிக எளிதாக இந்த சீட்டை வென்றிருக்க முடியும். ஆனால், தவெக தலைமை இந்த வாய்ப்பை காங்கிரஸுக்கு வழங்கியிருப்பதுதான் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும்பான்மை பெறத் தடுமாறிய இக்கட்டான சூழலில், திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு ஓடிவந்து ஆதரவளித்தது காங்கிரஸ்தான். அதன் தொடர்ச்சியாகவே இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளிக்க, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த அரசியல் ஆதரவுக்குக் கைமாறாக, காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், ஒரு எம்பி பதவியும் தருவதாக தவெக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ஏற்கெனவே அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது வந்துள்ள இடைத்தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி, தவெகவை தேசிய அளவில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், கொடுத்த வாக்குறுதியைக் காக்க இந்த எம்பி சீட்டை காங்கிரஸுக்கு தவெக தலைமை விட்டுக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தவெகவினரின் இந்த ‘வாக்குறுதி’ விளக்கத்தை ஏற்க மறுக்கும் திமுகவினர், இதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் பின்னணியும் சந்தேகமும் இருப்பதாகக் கிளப்பியுள்ளனர். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய முதல் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒரு கூட்டணிக் கட்சிக்கு தாராளமாக விட்டுக் கொடுப்பது தாராள மனப்பான்மை அல்ல என்று திமுகவினர் விமர்சிக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்களுக்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்ற தங்களின் உண்மையான அரசியல் நிலைப்பாட்டை இப்போதைக்கு வெளிப்படுத்தாமல் மறைப்பதற்கான ஒரு தப்பித்தல்வாத உத்திதான் இது என திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசிய அரசியலுக்குள் நேரடியாக நுழைந்தால், பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க வேண்டிய சூழல் தவெகவுக்கு உருவாகும். தற்போதைய அரசியல் சூழலில் மத்திய அரசுடன் இத்தகைய நேரடி மோதலைத் தவிர்க்கவே விஜய் விரும்புவதாகவும், அதனால்தான் இந்த விவகாரத்தை புத்திசாலித்தனமாக காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட்டு தவெக தப்பித்துக் கொண்டது என்றும் திமுகவினர் சந்தேகம் எழுப்புகின்றனர். கூட்டணி தர்மத்திற்காகக் கொடுக்கப்பட்ட சீட்டா அல்லது பாஜகவை எதிர்கொள்ள பயந்து எடுக்கப்பட்ட தப்பித்தல்வாத முடிவா என்ற விவாதம், தற்போதைய தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி…
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. முதலமைச்சர்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்ற எலக்ட்ரீசியனும், அவரது மனைவி ஹசீனா பீவியும் (36)…
திருச்சியில் தோழி வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமிக்கு கார் ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை…
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம், ஒட்டுமொத்த…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கும் முக்கிய விவகாரங்களை மையப்படுத்தி ஒரு தனியார் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.…