ஐயோ என்னப்பா இது… திடீரென உள்வாங்கிய ரூ 40 கோடி ஸ்மார்ட் சிட்டி சாலை?… அதிரவைக்கும் ஷாக்கிங் சிசிடிவி காட்சி… இந்தூரில் பெரும் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

இந்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ 40 கோடி செலவில் அமைக்கப்பட்ட பிரதான சாலையின் ஒரு பகுதி, கோரகுண்ட் சவுக் அருகே திடீரென உள்வாங்கி பெரிய பள்ளமானது. புதிய குடிநீர் குழாய் இணைக்கப்பட்டு, அதன் அழுத்தத்தைச் சோதிக்கும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நீர் இணைப்பைச் சோதித்தபோது, நிலத்தடி குழாயிலிருந்து அதிக அழுத்தத்துடன் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் சாலையின் அடியில் இருந்த மண் அரிப்பு ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே மேல் இருந்த தார் சாலை பலத்த சேதமடைந்து பூமிக்குள் புதைந்தது.

   

https://twitter.com/nextminutenews7/status/2089656207607025762/video/1

   

இந்த எதிர்பாராத விபத்தில் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சாலை திடீரென உள்வாங்கி பள்ளம் உருவான அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.