ஐயோ பாவம்… கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்த வாழ்க்கை… தார் வாகனம் ஆட்டோ மீது மோதி கொடூர விபத்து… நடுங்கவைக்கும் CCTV காட்சி…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கிலுள்ள பாமோன் கம்பூ பகுதியில், மஹிந்திரா தார் வாகனமும் ஆட்டோ ரிக்ஷாவும் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த தம்பதியின் மூன்று குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலையில் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த உடனே அங்கு கூடிய பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

https://twitter.com/nextminutenews7/status/2089669788021018979/video/1

   

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் விபத்துக்கான சரியான காரணம் குறித்த கூடுதல் தகவல்கள் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.