நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தான் தி கோட். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. அடுத்த படம் சிவகார்த்திகேயன் வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்கத்திட்டமிட்டு இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அந்த படம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது.

தற்போது நவம்பர் மாதத்தில் கால்ஷீட் சிவகார்த்திகேயன் ஒதுக்கி இருக்கிறார். இதனால் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட் பிரபு இலங்கையில் மேற்கொண்டு வந்தார். இந்த படமும் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட சயின்ஸ் பிக்சன் கதையில் தான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளார்கள்.

அதன்படி கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கப் போகிறார்கள். இவர்களில் கல்யாணி ஏற்கனவே வெங்கட் பிரபுவின் மாநாடு, சிவகார்த்திகேயன் ஹீரோ படங்களில் நடித்தவர். கயாடு லோகர் முதல் முறையாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளார். டிராகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது இதயம் முரளி, சிம்புவின் 49வது படம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
