சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் பின்னாளில் கமர்சியல் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மெகாஹிட் ஆகி வசூல் சாதனை படைத்து இருக்கிறது. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிசியான ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார் சிவாகார்த்திகேயன்.
இந்தநிலையில் நேற்றிரவு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலா 25 ஆண்டுகள் திரையுலகில் நிறைவு செய்த வெற்றி விழாவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பாலா அவர்களை புகழ்ந்து பேசியும் அமரன் படத்தை பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் கூறியது என்னவென்றால் முதலில் அமரன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பயமாக இருந்தது. ஏனென்றால் நெகட்டிவ் என்டிங் இந்த படத்தில் இருக்கிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் என்ன ஆகுமா என்று பயந்தேன். அப்போதுதான் பாலா சார் இயக்கிய பிதாமகன் திரைப்படத்தை பற்றி எனக்கு தோன்றியது. பிதாமகன் திரைப்படமும் சோகமான எண்டிங் கொண்டதுதான் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பி இருந்தது. அதை நினைத்து நான் மனதை தைரியப்படுத்திக் கொண்டேன். அதனால் எனக்கு பல விஷயங்களில் இன்ஸ்பிரேஷன் ஆக பாலா சார் இருக்கிறார் என்று நேற்று நடந்த ஆடியோ லாஞ்சில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.
