SJ சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் செல்வராஜ் ஜஸ்டின் பாண்டியன் என்பதாகும். நடிப்பு இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா என பன்முகங்களை கொண்டவர் SJ சூர்யா. 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து “வாலி” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை, ஆகிய திரைப்படங்களை இயக்கினார் SJ சூர்யா. அதற்குப் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் நடித்த தொடங்கினார் SJ சூர்யா. வியாபாரி, மெர்சல், டான், மாநாடு, மார்க் ஆண்டனி, ராயன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். இயக்குனராக இருந்ததை விடவும் நடிகராக அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
கடந்த ஆண்டு விஷாலுடன் இவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு இவர் தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் SJ சூர்யா. இந்நிலையில் இவரைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அது என்னவென்றால், நடிகர் பிரகாஷ்ராஜ் எப்பொழுதுமே புது மொழியில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகிவிட்டால் உடனே அந்த மொழியை கற்றுக்கொண்டு அவரே டப்பிங் பேசுவாராம். அதேபோல SJ சூர்யா தற்போது பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அனைத்து மொழிகளும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் அவர் சொந்த குரலிலே டப்பிங் செய்து வருகிறாராம். இனிமேல் அப்படி தான் செய்யப் போவதாக முடிவு எடுத்து இருக்கிறாராம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பிரகாஷ்ராஜ் பாலிசியை SJ சூர்யா அப்படியே ஃபாலோ பண்ணுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.