வாலி பட ரீமேக் வழக்கு.. கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த எஸ்.ஜே.சூர்யா..!!

By admin on புரட்டாதி 29, 2023

Spread the love

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இந்த படத்தில் அஜித்தும் சிம்ரனும் இணைந்து நடித்தனர். வெற்றி படமான வாலி அஜித்தின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தின் ஹிந்தி உரிமையை பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பெற்றுள்ளார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.

   

ஆனால் கதை அதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்களை எஸ்.ஜே சூர்யா வழங்காததால் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி இந்தி ரீமேக்கை துவங்க போனி கப்பூருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே சூர்யா உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

   

 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எம்.ஆர் ஷா உயர்நீதிமன்ற விசாரணையில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என கூறி எஸ். ஏ சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பிரதான வழக்கு தொடர்பாக நான்காவது மாஸ்டர் கோர்ட் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபர் முன் சுமார் 2.30 மணி நேரம் இயக்குனர் ஸ்ரீ சூர்யா சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் குறுக்கு விசாரணை இன்னும் முடிவடையாததால் வழக்கு அடுத்த வாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.