ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட். இதனையடுத்து கிரண் வில்லன், திவான், அரசு, வின்னர், நியூ, சகுனி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் கிரண் நடித்துள்ளார். சினிமாவில் நடித்த போது நடந்த கசப்பான அனுபவங்களை கிரண் தற்போது கூறியுள்ளார்.

சமீபத்தில் கிரண் அளித்த பேட்டியில் நான் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானதால் ஹிந்திக்கு சென்றேன். அங்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டேன். சினிமாவில் நடித்த போது எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. சிலர் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்ததால் மன அழுத்தம் ஏற்பட்டது. படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டதும் அவர்களது சுயரூபத்தை காட்டுவார்கள். இன்று இரவு வருகிறாயா? இல்லையா? என்ன சர்வசாதாரணமாக கேட்பார்கள்.

உடனே அந்த படத்தில் இருந்து விலகி விடுவேன். நடிப்பை விட்டு விட்டு ஏதாவது வியாபாரம் செய்யலாமா என நினைத்திருக்கிறேன். சுமார் 4 வருடங்களாக நான் காதலித்தவர் நல்லவர் இல்லை என தெரிந்தது. இதனால் காதலை முறித்துக் கொண்டேன். இப்போது அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விட்டது. பட வாய்ப்புகளும் வருகிறது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என கூறியுள்ளார்.

