ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

By Swetha on புரட்டாதி 3, 2026

Spread the love

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில் விபத்தில் சிக்கினர். இந்த கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்; பல பக்தர்கள் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஜான்சியில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் தேவராஜ் யாதவின் சகோதரர் விஜய் யாதவும் ஒருவர் ஆவார். சண்டா கிராமத்தைச் சேர்ந்த விஜய் யாதவின் மறைவுச் செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்ததும் வீட்டில் பெரும் சோகமும் அழுகையும் வெடித்தது.

   

https://twitter.com/Rudhrayadav001/status/2095376738985685359/video/1

   

தன் சகோதரரின் உடலைக் கண்டதும் தாங்க முடியாத துயரத்தில் சார்பு ஆய்வாளர் தேவராஜ் யாதவ் கட்டுப்பாடு இழந்து கதறி அழுதார்; தற்போது இந்தச் சோக நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.