குஜராத்தில் கோவில் பணிக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரோப்கார் அருந்து விழுந்து 6பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பஞ்ச மஹால் மாவட்டத்தில் பாகவத் மலையில் மகா காளி திருக்கோவில் உள்ளது. சுமார் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பழமை வாய்ந்த கோவிலில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிக்காக ரோப்கார் பயன்படுத்தி ஜல்லி, மணல் போன்ற சரக்குகளை ஏற்றி சென்றார்கள். நேற்று பிற்பகல் பணி நடந்து கொண்டிருந்தபோது ரோப்காரில் திடீரென்று கேபிள் அருந்து பல அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மொத்தமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முதல்முறை சரக்கு கொண்டு சென்றபோது விபத்து நடக்கவில்லை. இரண்டாவதாக சரக்கு ஏற்றிய போதுதான் இதுபோன்ற கோர சம்பவம் நடந்துள்ளது. இத்தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காஷ்மீரை சேர்ந்த இருவர், ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் மூவர் குஜராத்தை சேர்ந்தவர்களாம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்கள். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பகவத் மலையில் உள்ள மகா காளி கோவிலுக்கு போகவேண்டும் என்றால் கிட்டத்தட்ட 2000 படிகளை எரிச்செல்ல வேண்டுமாம். பல லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வந்து தரிசித்து செல்கிறார்களாம்.
