கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையில், செவிலியர்களும் மருத்துவமனை ஊழியர்களும் கொண்டாடிய ஓணம் பண்டிகை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதில் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையின் உள்பகுதியில், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கி பயன்படுத்தி, பணி நேரத்தில் நடனமாடியுள்ளனர். அதே நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல் பட்டு கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை கண்டித்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல இணையவாசிகள் கோரிக்க வைத்து வருகின்றனர்.
