#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையத்துள்ளார். கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படத்தின் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகள் அதிக காலம் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கோரமண்டல் தாஜ் ஹோட்டலில் சில முக்கிய நபர்களை மட்டுமே அழைத்து சிம்பிளாக நடைபெற்றது. தற்பொழுது இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறாராம். அதற்கு அவர் என்ன கதை சொன்னாருன்னு தெரியுமா..? அதாவது, படத்தின் உருவாக்கத்தை விரைவுப்படுத்தும் பொருட்டு அவர் எந்த சம்பளமும் முன்பணமாக வாங்காமல் ஒத்துக் கொண்டு நடித்துள்ளாராம்.
இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் ‘ இந்த படத்திற்கு நீங்க சம்பளமே வாங்கலையா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘படம் வந்தா மட்டும் போதும். தமிழ் மக்களுக்கு புதுசா எதையாவது கொடுக்கணும்னு நினைக்கிறோம்’ என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னெவென்றால் ‘படம் ரிலீஸ் ஆனால் போதும்னு, பெருந்தன்மையாக காட்டிட்டு இப்படத்தின் வெற்றியின் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்துவதோடு, படத்தின் பாதி லாபத்தில் பங்கு கேட்கலாம்’ என்று சிவகார்த்திகேயன் இருப்பதாக கூறி வருகின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…